விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேலிக் கோல் வெட்டி*  விளையாடு வில் ஏற்றி* 
  தாலிக் கொழுந்தைத்*  தடங்கழுத்திற் பூண்டு*
  பீலித் தழையைப்*  பிணைத்துப் பிறகிட்டு* 
  காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
  கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேலிகோல் - வேலிக்கால்களிலுள்ள கோலை;
வெட்டி - (வாளால்) வெட்டி (அதை);
விளையாடு வில் - லீலோபகரணமான வில்லாகச் செய்து;
ஏற்றி - (அதிலே) நாணேற்றியும்;
கொழுந்து தாலியை - சிறந்த ஆமைத்தாலியை;
 

விளக்க உரை

இடைச்சாதிக்குத் தக்கபடி ஆமைத்தாலி என்னும் ஒரு வகை ஆபரணத்தைக் கழுத்திலணிந்தும், மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப் பின்புறத்திலிருந்தும் வேலிக்கால்களிலே வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நாணேறிட்டு வளைத்து விளையாடிக்கொண்டே கன்றுகளை மேய்த்துக் கொண்டே செல்லுகின்ற என் மகனுக்குக் கோல் கொண்டுவா‘ என்கை. வேலிக்கோல் – வேலிக் கால்களிலே வளர்ந்த சிறுகோல்களென்னுதல், வளைவையுடைய கோலென்னுதல். தாலிக்கொழுந்தை – உருபு பிரித்துக் கூட்டுக. தாலிகொழுந்து – பனையின் (வெண்ணிறமான) குருத்தென்றும் உரைக்கலாம். இதை ஓர் அணியாகச் சமைத்துக் கழுத்திலணிதல் முற்காலத்து இயல்பென்க. இப்பொருளில், தாளி –தாலியென ளகரத்திற்கு லகரம் போலியாக வந்ததாம். “விளையாடு வில்லேந்தி“ என்ற பாடத்தில், ‘வேலிக்கால்களிலே கோலைவெட்டி, (அதை) விளையாடு வில்லாக (க்கையில்) ஏந்திக்கொண்டு‘ என்று பொருள் கொள்ளலாம்.

English Translation

The ocean-hued Lord wears a talisman made of tender Palm leaf around his neck, sticks a fan made of peacock feathers on his back, makes a toy bow with a stick cut from the hedge and goes after the cows. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்