விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
    மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*
    ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
    கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முது முந்நீர் - கடல் வெள்ளம்
வானோர் அளவும் - தேவர்களின் எல்லையளவும்
வளர்ந்த காலம் - பரந்து சென்ற காலத்திலே
வலி உருவின் மீன் ஆய் வந்து - வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து
வியந்து - ஆச்சரியப்படும்படியாக

விளக்க உரை

வலியுருவின் மீனாய் = வந்து இவ்விடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்; - “கடல் வெள்ளத்தைத் தன்னுடைய ஒரு செலுவிலே அடக்கவல்ல மத்ஸ்யமாய் வந்து” என்பதாம். செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும் படும். அன்றி, செலுவாவது – மீன்செட்டை. யெனப்படும் மீன் சிறகு என்றுஞ் சொல்லுவர். “மான யோசனை யளவொழி மெய்யுருவாய்ந்த, மீனமாயினனெடுங்கடற் பரவையின் வீழ்ந்து, கானவெண்டிரைக் கருங்கடலளறெழக் கலக்கிப், போன வாளெயிற் றசுரனைத் தடவுறும் புகுந்து” (கந்த புராணம் – உபதேச காண்டம்) என்றபடி எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பல யோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது அந்த மத்ஸ்யத்தின் ஒரு செலுவினகத்தே கடல் வெள்ளம் முழுவதும் ஒடுங்கும்படி யிருந்த தென அதன் பெருமை தோன்ற ‘வலியுருவின் மீனாய்’ என்றது. ஆனாவுருவின் = “ஸதைகரூபரூபாய” “அவிகாராய சுத்தாய” என்கிறபடியே என்றும் ஒரு படிப்பட நின்று விகாரமற்ற வுருவையுடையவன் என்கை. அப்படியாகில், மத்ஸ்யகூர்மாதி ரூபமான விகாரவுருக்களைக் கொண்டது என்னோவெனின்; கருமமடியாகக் கொண்டிலன்; க்ருபையடியாகக் கொண்டவத்தனை. விகாரமற்றவனென்று பிரமாணங்கள் சொல்லுவ தெல்லாம் கருமநிபந்தனமான விகாரமில்லாமையையே யென்றுணர்க.

English Translation

In the days of yore when the ocean rose sky-high and flooded the land, the Lord came as a huge fish and gave deliverance to the world. He is the coal lotus-eyes invincible cowherd-lad krishna. I know he is in kannapuram, surrounded by fertile fields and thick forsts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்