விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*
    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடி புல்கு - பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற
கணபுரம் - திருக்கண்ணபுரம்;-
பலர் தொழ - பல பக்தர்கள் வணங்கும்படியாக
படி புல்கும் அடி இணை உடையவர் - பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும்
மலர் வைகு - தாமரைமலரில் பொருந்திய

விளக்க உரை

கழனிகளில் நடுகைக்காக எங்கும் பரம்பிக்கிடக்கிற நாற்று முடிகள் மூன்றாமடியிலுள்ள ‘முடி’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவை நிரம்பிய பெரிய வயல்களிலே உழவர்கள் கலப்பையைக்கொண்டு புகுந்து நடத்துவர்கள்; காலாலே ஒருகால் குழப்புவர்கள்; அவ்வளவிலே இடையிலே தப்பிக்கிடந்த தாமரைப்பூவானது பரிமளத்தைப் புறப்படவிடுமாம். “படைநின்ற பைந்தாமரையோடு அணிநீலம் மடைநின்றலரும் வயலாலிமணாளா” (11-8-6) என்றபாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.- வயல்களிலெங்கும் தாமரை முதலிய மலர்கள் மணங்கமழப் பெற்ற திருக்கண்ணபுரம் *அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறைமார்பனுடைய திவ்ய தேசம் என்றதாயிற்று. படிபுல்குமடியிணை பலர்தொழ = முன்பு உலகமளந்த திருவடிகளைத் திருக்கண்ணபுரத்திலே பலரும் வணங்கும்படியாக என்றுமாம். படி – பூமி. மலர்வைகுகொடி – பெரியபிராட்டியார். ‘கொடி’ என்பது ஸ்த்ரீஜாதிக்கு உவமையாகு பெயர்.

English Translation

The Lord who measured the Earth with his feet and who bears the lotus-dame Lakshmi on his mountain-like-chest resides in kannapuram where ploughed fertile fields made ready for transplantation carry the fragrance of lotus blossoms.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்