விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*
    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மணம் - விவாஹத்தாலுண்டாகக் கூடிய
மிகு கலவி - மிகுந்த ஸம்ச்லேஷத்தை
உள் - உட்கொண்ட
அடிகள் தம் - ஸ்வாமியினுடைய
இடம் - திவ்யதேசமாம்.

விளக்க உரை

நித்யோத்ஸவ பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவங்களென்று சொல்லப்படுகிற மஹோத்ஸவங்கள்தோறும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாங்கூடி அநுபவிக்கப் பெற்ற திருக்கண்ணபுரம் – இரட்டை மருத மரங்களைத் தவழ் நடைப் போக்கிலே முறித்தொழித்தவனும், ஏழ்விடை செற்று நப்பின்னைப் பிராட்டியின் கலவியை அநுபவித்தவனுமான பெருமான் உறையுமிடம் என்பதாம். இகல் – பகையும், யுத்தமும், கலவியுள் – கலவிக்காக, எருதினோடு இகல் செய்து, அந்தவிடாய் தீர உளையுமிடம் திருக்கண்ணபுரம் என்னவுமாம்.

English Translation

The Lord who uprooted the twin Marudu trees and fought seven bulls for the joy of union with corsetted Nappinnai resides in kannapuram which is teaming with love killed devotees during auspicious festival days.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்