விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*
    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆமை ஆகி - கூர்மரூபியாயும்
அரி ஆகி - நரஸிம்ஹரூபியாயும்
அன்னம் ஆகி - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)
அந்தணர் தம் - பிராமணர்களினுடைய
ஓமம் ஆகி - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்

விளக்க உரை

‘ஹோமம் :’ என்னும் வடசொல் ஓம மெனத் திரிந்தது; லக்ஷணையால், யாகங்களிலிடும் ஹவிஸஸுக்களைக் கொள்பவன் என்றவாறு. ‘உலகு சூழ்ந்த நெடும் புணரி’ என்று பெரும் பாலும் வழங்கி வரும் பாடம் வியாக்கியானத்தில் பாடாந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது. “உவரி சூழ்ந்த நெடும்புணரி” என்றோதுக. புணரி – அலைக்கும் கடலுக்கும் பெயர்; இங்கு அலையைச் சொல்லக்கடவது. ‘நெடும்புணரி உவரி சூழ்ந்த சேமமதிள் சூழிலங்கை’ என்று அந்வயிப்பது. உவரி – கடல் சேமம் – க்ஷேமம். சிரம், கரம் – வடசொற்கள்.

English Translation

O Hearth! The Lord who came in the yore as a furtile, a man-lion, and a swan, is the Lord of the vedic fire sacrifice and the four yugas; he crossed over into the oean-girdled Lanka city and cut as under the heads and arms of the mighty Rakshasa king; he is the father of Madana, and resident of kannapuram. Come let us worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்