விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னன்தன் தேவிமார்*  கண்டு மகிழ்வு எய்த* 
    முன் இவ் உலகினை*  முற்றும் அளந்தவன்*
    பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்* 
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - வாமநாவதாரகாலத்தில்;
மன்னன்தன் - அஸுரராஜனான மஹாபலியினுடைய;
தேவிமார் - மனைவியர்கள்;
கண்டு - (தன்னுடைய) வடிவைக்கண்டு;
மகிழ்வு எய்த - மகிழ்ச்சி யடையும்படி;

விளக்க உரை

எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்கவல்ல வாமநவடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் – மழலைச் சொல் சொல்லும் அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம். பொன்னின் = இன் – சாரியை. பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.

English Translation

Long ago when he came as a beautiful manikin, the wives of King Bali were pleased to see him. Then he grew and measured the whole Universe. He has a thousand names. O Raven, rest his golden locks on a flowery support and comb it from behind, come and comb his hair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்