விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*
    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டீர் - பகவத் கைங்கரியத்தில் ருசி யுடையீர்காள்!
உய்யும் வகை - உஜ்ஜீவிக்கும் வழியை
கண்டேன் - தெரிந்து கொண்டேன்;
முன் - முற்காலத்தில்
துளங்கா அரக்கர் - ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத ராக்ஷஸர்கள்

விளக்க உரை

பாசுரந் தொடங்கும்பொதே “தொண்டீர்! உய்யும் வகை கண்டேன்” என்று தொடங்குகிற ஆழ்வாருடைய களிப்பை உன் சொல்வோம்! கீழ்த்திருமொழியில் “வலிசெய்வ தொழியாதே” என்றும் “செய்வதொன்றறியேனே” என்றும் “அஞ்சேலென்பாரில்லையே” என்றும் “என்னாவியை எனக்கெனப் பெறலாமே” என்றும் “பாவியேனாவியை அடுகின்றதே” என்றும் கூறின அலமாப்பெல்லாம் பகலவனைக்கண்ட பனிபோல் அகன்றொழிந்தமை தோன்றத் தொண்டீருய்யும் வகைகண்டேன் என்று களித்துப் பேசுகிறார். இது ‘கண்ணபுரம் நாம் தொழுதுமே’ என்பதில் அந்வயிக்கும். திருக்கண்ணபுரம் தொழும்படியான பாக்கியம் பெற்றதுதானே தாம் கண்ட உய்யும்வகை என்றவாறு. “ஒழிவில் காலமெல்லாமுடனாய்மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்றாற் போலே தொண்டுபூண் டமுதமுண்பதில் பாரிப்புக் கொண்டிருக்குமவர்களே! நாம் ஸத்தை பெறுவதற்கு ஒரு நல்விரகுகண்டேன்; (அதாவது) திருக்கண்ணபுரம் தொழுவோம், வாருங்கோள் என்கிறார்.

English Translation

Devotees! I know how to rise now; the auspicious Lord who killed many bold Rakshasas with his bow and his arrow spitting fire in the battefield Has grat plans; he with his lotus lady Lakshmi and Dame Earth, has come to reside with joy and always in kannapuram, O, let us worship!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்