விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உந்தி எழுந்த*  உருவ மலர்தன்னில்*  
  சந்தச் சதுமுகன்*  தன்னைப் படைத்தவன்* 
  கொந்தக் குழலைக்*  குறந்து புளி அட்டித்* 
  தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்! 
  தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உந்தி - (தனது) திருநாபியிலே;
எழுந்த - உண்டான;
உருவம் - ஸுருபத்தையுடைய;
மலர் தன்னில் - தாமரைப்பூவிலே;
சந்தம - சந்தஸ்ஸை நிரூபகமாகவுடைய

விளக்க உரை

கீழ் “வெண்ணெயளைந்த குணுங்கும்” என்ற திருமொழியில் கூறியபடி யசோதைப்பிராட்டி ஸ்ரீக்ருஷ்ணனை எண்ணெய் தேய்த்துப் புளிப்பழமிட்டு நீராட்டியதனால், அப்படி நீராடின ஸ்ரீக்ருஷ்ணனுடைய கூந்தல் நெறித்திருக்கும். ஆதலால், யசோதையானவள் ‘காக்கையே! நெறிப்புப் போம்படி எண்ணெய் தடவித் தந்தச் சீப்பினால் தலைவாரவேணும்’ என்கிறாள். ‘புழுகட்டி’ என்றும் பாடம். புழுகு – புனுகு எண்ணெய். அதைத் தடவிக் குழல்வாராய் என முடிபுகாண்க. ????? ???? என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.

English Translation

O Raven this is Damodara. On a beautiful lotus springing from his novel, he creates the four-faced Brahma and all else. Gather his trick hair washed with soap nut, and comb it, come and comb his hair with an ivory comb.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்