விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*
    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அமரும் சோலை - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும்
வயல் - கழனிகளை யுடையதுமான
ஆலி - திருவாலி யென்கிற
நல் நாடன் - நல்ல நாட்டுக்குத் தலைவரும்
கண்ட சீர் - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும்
வென்றி - ஜயசீலருமான

விளக்க உரை

நிகமநப் பாசுரங்களில் “பூவளருங் கற்பகஞ்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே” “நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே” “நாமருவியிவைபாட வினையாய நண்ணாவே” என்று பயனுரைப்பதுபோல இப்பதிகத்திற்குப் பயனுரைக்கப் படவில்லை; தொண்டர் கட்கு இத்திருமொழியைப் பாடுதல் ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டப்பட்ட தாயிற்று. “தொண்டர்கள் பாட” என்று படர்க்கையாகச் சொல்ல வேண்டுமிடத்துத் ‘தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை. ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறபடி.

English Translation

O Dragon-fly! The victorious kaliyan, king of the bee-humming fertile groves-and-fields Vayalali has sung this garland of sweet Tamil songs for the cloud-hued Lord of Tiukkannapuram. That we devotees may sing it, grace us with the fragrance of his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்