விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*
    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண்ட மலர் எல்லாம் - விகஸித்த புஷ்பங்களி லெல்லாம்
ஊதி - ஒலிசெய்து
என் பெறுதி - என்னபேறு பெறுகின்றாய்? (ஒன்றுமில்லை)
அண்டம் முதல்வன் - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
அமருர்கள் எல்லாரும் பண்டு வணங்கும் - தேவர்களெல்லாரும் (தங்கள் அஹங்காரந் தொலைந்து) ஸேவித்து வணங்கப் பெற்றவனுமான

விளக்க உரை

வழக்கப்படி பரகால நாயகியின் தலையில் மதுவுண்ண வந்த தும்பி இங்குப் பூவுமில்லை மதுவுமில்லை என்றறிந்தவாறே வேறு சில மலர்களிலே மதுவுண்ணப் புக, அதனைக் கண்ட பரகாலநாயகி கூறுகின்றாள்;- திறந்து கிடந்த வாசலெல்லாம் நுழைந்து திரியுமவை போலே விண்டமலர்கள் தோறும் நீ ஊதித் திரிவதனால் என்ன பேறு பெறப்போகிறாய்? அல்பமாயும் அஸ்திரமாயுமுள்ள மதுவையுடைய இம்மலர்களிலே ஊதித்திரிவது தவிர்ந்து, அண்டாதிபதியாயும் நித்யஸூரிகளெல்லாரும் திரண்டு வந்து கண்டு வணங்கும்படியாகத் திருக்கண்ணபுரத்தில் நித்ய ஸந்நிதிபண்ணி யிருப்பவனாயுமுள்ள பெருமானுடைய திருத்துழாய் மாலையிலே உனது ஸஹோத்ரிகளோடே கூடித் தங்கியிருந்து அங்குள்ள பரிமளத்தை இங்குக் கொணர்ந்து ஊதுவாயாகில் அநல்பமும் ஸ்திரமுமான மதுவைப் பருகலா மென்றாளாயிற்று.

English Translation

O Dragon-flu! What do you get from hovering over blossoming flowers! Go to my Lord of Tirukkannapuram, -He is the Lord of the Universe, worshipped by all the celestials –come back and blow over me the fragrance of his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்