விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிண்டத் திரளையும்*  பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்* 
    உண்டற்கு வேண்டி*  நீ ஓடித் திரியாதே*
    அண்டத்து அமரர்*  பெருமான் அழகு அமர்* 
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்! 
    மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிண்டம் திரளையும் - (பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்;
பேய்க்கு இட்ட - பிசாசங்களுக்குப் போகட்ட;
நீர் சோறும் - நீரையுடைய சோற்றையும்;
உண்டற்கு - உண்ணுதற்கு;
வேண்டி - விரும்பி;
 

விளக்க உரை

தந்தை தாய் முதலானார் இறந்த திதியில் செய்யும் க்ராத்தத்தில் பித்ராதி தேவதைகளை உத்தேசித்துப் பிண்டவுருண்டையைக் காகத்தை அழைத்து இடுவதும், பிசாசம் முதலியவற்றைக் குறித்து ஜலத்தோடு கூடிய சோற்றைப் பலிகொடுத்தலும் வழக்கமென்க. இப்படி கண்ட சோற்றுக்கும் அலைந்து திரியாமல் இவனுடைய குழலை வார வரவேணுமென்றதாயிற்று.

English Translation

O Raven, do not go roaming, desirous of eating the coocked rice offered with water to the manes and ghouls. The Lord of gods, Lord of the Universe with beautiful dark curls like bumble-bees, is a wond

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்