விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*
    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளங்கு - (திருமேனியில்) விளங்குகின்ற
புரி நூலன் - யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பலரும் - எல்லாரும்
பாதம் - திருவடிகளை
பரவி பணிந்து ஏத்தி - ஆச்ரயித்து வணங்கித் துதித்து

விளக்க உரை

“கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.

English Translation

O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram,-He is first-cause Lord of the Vedas, he wears the Vedic thread, the world praises his feet, offering worship, filled with love, -come back and blow over me the pollen from his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்