விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*
    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோல் தும்பி - கொம்புகளில் திரிகின்றவண்டே!
விண்ணவர் தங்கள் பெருமான் - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
திரு மார்வன் - பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும்
மண்ணவர் எல்லாம் வணங்கும் - இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும்
மலி புகழ் சேர் - நிறைந்த கீர்த்தியை யுடையவனும்

விளக்க உரை

‘தும்பி’ என்பது வண்டுகளில் ஒருவகைச் சாதி; கருவண்டு என்றுங் கூறுவர். மரக்கொம்புளிலே மதுவுக்காகத் திரியுமியல்வுடைமைபற்றக் ‘கோல்தும்பீ!’ என விளக்கப்பட்டது. ஸத்தையற்றுக் கிடக்கின்ற என்னிடத்திலே இப்போது நீ வந்து சுழலமிடுவதால் என்ன பயனுண்டு? முன்போல் நான் ||தளிரும் முறியுமாய்க் கிடக்கிறேனென்றிருக்கிறாயோ? பாராய் நான் வாடி வதங்கிக்கிடக்கும்படியை; என் தலையிலே பூத்தங்கினாலன்றோ மது இருக்கும்; மது இருந்தாலன்றோ நீ இங்கே வந்த சுழலமிடுவதற்கு ஒரு பயனுண்டாகும்; உனக்கு இங்கே மதுவுண்ண விருப்பமுண்டாகில் எனக்கு ஸத்தையை யுண்டாக்கப்பார்; என்ன செய்தால் ஸத்தையுண்டாகு மென்று கேட்கிறாயோ? கேளாய் கோல் தும்பீ! ; - நித்ய ஸூரிகளுக்கெல்லாம் நிர்வாஹகனாயிருக்கிற பெருமான் உனக்குத் தெரியுமே; அவனிடத்தில் நாம் அணுக முடியுமோ வென்று நினையாதே; அவன் திருமார்வன்; புருஷகார பூதையாய் காருண்ய ரூபையான பிராட்டியைத் திருமார்பிலே கொண்டவனாதலால் கூசாதே சென்று புகலாம்; விண்ணவர் தங்கள் பெருமானித்தே நான் சென்றால் மீண்டுவர முடியாதே யென்கிறாயோ? அங்குச் செல்லவேண்டா; லீலாவிபூதியிலுள்ளா ரெல்லாரும் எளிதாக வணங்கும்படி நிற்பவன்; ‘பரத்வ நிலைமையை விட்டு இப்படி ஸுலபனாவதே!’ என்ற அனைவராலும் கொண்டாடப்பட்டு நிரம்பிய புகழ்பெற்றிருப்பவன்; திருக்கண்ணபுரத்திலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறான்; அன்னவனுடைய திருவபிஷேகத்திற் சாத்தியுள்ள திருத்துழாயின் பரிமளத்தை முகந்துகொண்டு இங்கே வந்து ஊது; இது செய்வையாகில் ஸத்தை பெறுவேன்; உனக்கு ஏராளமாக மதுவுண்ணக் கிடைக்கும் என்கிறாள் பரகாலநாயகி.

English Translation

O Dragon-fly! Go now to my Lord of Tirkkannapuram. –he is the Lord of the celestials, he bears Sri on his chest, He is worshipped by the whole world, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்