விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*
    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாய் எடுத்த - தாயான யசோதைப்பிராட்டி கையிலெடுத்த
சிறு கோலுக்கு - சிறிய தடிக்கு
உளைந்த ஓடி - அஞ்சி ஓடிச் சென்று
தயிர் உண்ட வாய் துடைத்த - தயிரை அமுதுசெய்த வாயைத் துடைத்த
மைந்தனுக்கு - ஸ்வாமிக்கு

விளக்க உரை

வேதமந்திரங்களைக் கொண்டு அந்தணர்கள் அக்நி காரியங்கள் செய்து வேதமரியாதையை நடத்திப் போரும்படியான திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனும், க்ருஷ்ணாவதாரத்தில் தான் செய்த தீம்புகட்குச் சீற்றங்கொண்ட யசோதைப்பிராட்டி அடிப்பதாகக் கையிற் கோலை யெடுக்க, அதற்கு அஞ்சி ஓடுமளவிலே எதிர்ப்படுமவர்கள் வாயில் தயிருண்ட சுவடு இருப்பதைக் காட்டி, ‘நீ தயிர் களவு கண்டாயன்றோ’ என்பர்களே யென்று அதை மறைக்க வேண்டி அத் தயிர்ச் சுவடு தன்னைத் துடைக்கப் புகுந்து தயிரை முகம் முழுவதும் தடவிக்கொண்டு பரமமுக்த்தனுமான பெருமானுடைய அக்குணத்திலேயீடுபட்டு வளையிழந்தே னென்கிறாள்.

English Translation

Tirukkannapuram is thronged by Vedic seers who chant the Mantras, feed the fires and keep the vedas alive. Here resides the Lord who cringed in fear on seeing his mother's rod and wiped hips curd-smeared tell-tale mouth. Alas, I have lost my beautiful golden bangles to him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்