விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிழக்கிற் குடி மன்னர்*  கேடு இலாதாரை* 
    அழிப்பான் நினைந்திட்டு*  அவ் ஆழிஅதனால்* 
    விழிக்கும் அளவிலே*  வேர் அறுத்தானைக்* 
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்! 
    கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கேடு இலாதார் - (வரபலமும் புஜபலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லையென்று நி னைத்திருந்தவரான;
கிழக்கில் குடி மன்னர - கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற்குடியிருந்த ராஜாக்களை;
அழிப்பான் - அழிக்கும்படி;
நினைந்திட்டு - எண்ணி;
அ ஆழி அதனால் - அந்தச் சக்ராயுதத்தால்;

விளக்க உரை

கிழக்கிற் குடி மன்னர் – ப்ராக்ஜ்யோதிஷபுரவாஸிகளான நிரகாஸுரன் முதலானார். அவ்வாழி – அ – உலகறிசுட்டு. ப்ரஸித்தியைக் காட்டும். இனி, கேடு இலாதாரை – (விஷ்ணுபக்தராதலால்) அழிவில்லாதவரான இந்த்ராதிகளை, அழிப்பான் நினைந்திட்ட கிழக்கிற் குடிமன்னர் விழிக்குமளவிலே (அவரை) வேரறுத்தான் என்றும் உரைப்பர். அழிப்பான் – எதிர்காலவினையெச்சம்.

English Translation

Within the twinkle of any eye this Govinda wielded his discus and destroyed Narakasura by the root, and the other kings of the root, and the other kings of the Eastern kingdoms who meant harm to the i

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்