விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்*  கன்று வீசிய ஈசனை*  பேய்மகள்- 
    துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை*  தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
    நஞ்சினை*  அமுதத்தினை நாதனை*   நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை* 
    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேய் மகள் - (பூதனையென்னும்) பேய்ச்சியானவள்
துஞ்ச - முடியும்படி
நஞ்சு - (அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை
சுவைத்து உண்ட - ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த
தோன்றலை - இளமகனும்,

விளக்க உரை

வெஞ்சினக் களிற்றை மிக்க கோபங்கொண்ட மாயானை போன்றவன் எம்பெருமான் என்கிறார்; அடியவர்கள் பக்கல் எம்பெருமானுக்கு அநுக்ரஹம் இருக்கவேண்டியது போல, எதிரிகள் பேரில் நிக்ரஹம் இருக்கவேண்டியதும் ஆவச்யகமாதலால் அதனை அநுஸந்திக்கிறபடி. ஆச்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக்களிறு போன்றவனென்க. (விளங்காய் இத்யாதி.) முள்ளைக்கொண்டே முள்ளைக்களைவது போல, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரன்மேல் வீசி யெறிந்து இருவரையும் ஒன்று சேர முடித்தவன்; பூதனையானவள் மாளும்படி அவளுடைய முலைத் தடத்து நஞ்சை உறிஞ்சியுண்ட மதலை; நானே அரசனென்று மார்பு நெறித்திருந்த இராவணனுக்கு விஷம்போல் தோன்றினவன்; விபீஷணாழ்வான்போல்வார்க்கு அமுதமாயிருப்பவன்; தன்னை விரும்பு மன்பர்க்குச் சென்னிக்கு மலர்ந்த பூவாயிருப்பவன்; கம்ஸனுடைய தீய புந்தியை அவன்றன்னோடே போக்கி, உகவாதாரோடு செவ்வை யழியப் பரிமாறுமவன்; ஆக இப்படிப் பட்டவனைத் திருக்கண்ணமங்கையிற் கண்டே னென்றாராயிற்று. தோன்றல் – சிறுபிள்ளையும் பெருவீரனும். ‘நச்சுவாருச்சிமேல்’ என்ற விடத்து உச்சியைச் சொன்னது அற்றும் அவயவங்கள் எல்லாவற்றுக்கும் உபலக்ஷணம்; திருவாய்மொழியில் (1-9) “இவையுமலையு முவையும்” என்ற திருவாய்மொழியில் “என்னுடைச் சூழலுளானே – உன்னருகலிலானே – என்னொருக்கலையானே – என்னெஞ்சினுளானே – என்னுடைத் தோளிணையானே – என்னுடை நாவினுளானே – என் கண்ணினுளானே – என் னெற்றியுளானே – என்னுச்சியுளானே” என்றவைகாண்க.

English Translation

The angry elephant, the Lord who threw a calf against a tree feeling its fruit, the child who drank the poison from the breast of the ogress, the sweet ambrosia who worked as poison on the wicked Rakshasa king Ravana, the Lord residing over the heads of those who desire him, the slayer of Kamsa, - I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்