விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருத்தனை திசை நான்முகன் தந்தையை*  தேவ தேவனை மூவரில் முன்னிய 
    விருத்தனை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
    அருத்தனை*  அரியை பரிகீறிய  அப்பனை*  அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற 
    கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருத்தனை - எப்போதும் பூர்ணத்ருப்தி யுள்ளவனும்
திசை நான்முகன் தந்தையை - சதுர்முகப்ரஹ்மாவுக்கு ஜனகனும்
தேவதேவனை - தேவாதிதேவனும்
மூவரில் - (‘அரி அயன் அரன்’ என்று சொல்லப்படுகிற மும்மூர்த்திகளுள்
முன்னிய - முற்பட்டிருக்கிற

விளக்க உரை

என்னும் வடசொல் ‘திருத்தன்’ எனத்திரிந்தது. அவாப்த ஸமஸ்த காமனாகையாலே எப்போதும் திருப்தியையுடையவன் என்றபடி. திசைநான்முகன் தந்தையை இவ்வருகுண்டான உலகங்களைப் படைப்பதற்காகப் பிரமனைத் தோன்றுவித்தவ னென்கை. ‘திசைமுகன்’ என்றாவது ‘நானமுகன்’ என்றாவது பிரயோகிக்கவேண்டியிருக்க, ‘திசைநான்முகன்’ என்றது தமிழ் வழக்கு. என்னும் வடசொல் விருத்தன் எனத்திரிந்தது. கண்ணுதல் கூடிய அருத்தன் நுதல்-நெற்றி; நெற்றியிற் கண்ணையுடையவன் ருத்ரன்; அவன் கூடிய த்தையுடையவன். அரி – ஹரி. பரி - குதிரை; கேசியென்னு மசுரன். அப்பில் ஆரழலாய் நின்ற அப்பு – ஜலம்; (வடசொல்) ஜலத்திலுள்ள ஆரழல் - படபாக்நி; அது ஜலாம்சமெல்லாம் தன்னிடத்திலே வந்து சுவறும்படி யிருக்குமாபோலே ஸகல பதார்த்தங்களும் தன் பக்கலிலே வந்து லயிக்கும்படி யிருக்கிறவன் என்கை. என்னும் வடசொல் ‘கருத்தன்’ எனத் திரிந்தது.

English Translation

The satisfied one, the father of Brahma, the Lord of gods, the foremost of the Tri-murti, the radiant one, the Earth, the sky, the Lord with Siva on his person, the man-lion, the horse-slayer, the dissolving aspect of water, the Lord surrounded by bee-humming groves, -I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்