விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை*  சுடர் வான் கலன் பெய்தது ஓர் 
    செப்பினை*  திருமங்கை மணாளனை*  தேவனை திகழும் பவளத்துஒளி 
    ஒப்பனை*  உலகுஏழினை ஊழியை*  ஆழிஏந்திய கையனை அந்தணர் 
    கற்பினை*  கழுநீர் மலரும் வயல்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீறிய - சீற்றங்கொண்ட
தோன்றலை - பெருமையிற்சிறந்தவனும்
சுடர் வான் கலன்பெய்தது - ஒளிபொருந்திய சிறந்த ஆபரணங்களை இட்டு வைப்பதற்குரிய
ஓர் செப்பினை - ஒரு கரண்டகம் போன்றவனும்
திருமங்கை மணாளனை  - திருமகள் கொழுநனும்

விளக்க உரை

துப்பு உடையவன் துப்பன்; துப்பாவது நினைத்தபடி செய்து தலைக்கட்டிக் கொள்ளவல்ல ஸாமர்த்தியம்; எம்பெருமானுடைய ஸத்ய ஸங்கல்பத்வத்தைச் சொன்னபடி. துரங்கம் - வடசொல்; விசையாக நடப்பதென்று குதிரைக்குக் காரணப்பெயர். கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் ஒருவனான கேசி யென்பவன் குதிரை யுருவங்கொண்டு ஆயர்களுக்கெல்லாம் மிக்க பயங்கரனாய்க் கனைத்துக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்து வர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இரு பிளவாக வகிர்ந்து தள்ளின னென்ற வரலாறு காண்க. சுடர் வான் கலன்பெய்ததோர் செப்பினை = ஒளிமிக்க சிறந்த திருவாபரணமிட் வைக்கும் செப்பு என்னலாம் எம்பெருமானை. “செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில், தங்கிய பொன் வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்னுந் திருவாபரணங்களை சீர்மை பெறுமிட மென்கை. அன்றியே, ‘சுடர்வான்கலன்’ என்று பிராட்டியாகிற திருவாபரணத்தைச் சொல்லிற்றாகவுமாம்; இதற்கு விவரணம் ‘திருமங்கை மணாளனை’ என்றது. ‘தேவனை’ என்றதற்கு – “பிராட்டியுந்தானுமான சேர்த்தியிலே உண்டான ஒற்றுமஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும் மாளிகைச் சாந்தின் நாற்றமுமாய்க்கொண்டு திருமேனியில் புகர்தோன்ற நின்ற நிலை” என்ற பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியான வாக்கியம் ரஸிக்கத்தக்கது. அந்தணர் கற்பினை = ‘கற்பு’ என்று நீதிநெறிக்கும் கல்விக்கும் பெயர்.

English Translation

The beautiful one who overpowered the clever horse kesin, the radiant sky, the gold-plated copper, the husband of Sri, the Lord of gods, the radiance of coral, the seven worlds, time, the Lord of discus, the learning of vedic seers, the lotus-growing fields, -I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்