விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை*  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை* 
    மாயனை மதிள் கோவல்இடைகழி*  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
    ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை*  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை* 
    காசினை மணியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தணர் - அந்தணர்களினுடைய
சிந்தையுள் - மனத்திலேயிருந்து கொண்டு
ஈசனை - அவர்களை நியமிப்பவனும்
இலங்கும் சுடர் சோதியை - ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும்.
எந்தையை - எனக்கு ஸ்வாமியம்

விளக்க உரை

பூதனையினுடைய முலைத்தடத்துண்டான விஷத்தை அமுதுசெய்த சிறு குழந்தை யெனினும் தெள்ளியார் பலர் கைதொழுந்தேவனாயிருப்பவன்; திருக்கோவலிடை கழியில் முதலாழ்வார்களோடு நெருக்கிக் கலந்து நித்யயுவாவா யிருக்குமவன்; அந்தணர்களின் சிந்தையிற் புகுந்து அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டிருக்கிறவன்; இவர்களுடைய சரீரத்தில் உறைந்திருக்கச் செய்தேயும் அதிலுள்ள தோஷங்கள் தன் பக்கலில் தட்டாமல் ஔஜ்ஜ்வல்யமே வடிவாயிருப்பவன்; இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவன்; தளர்ந்த காலத்து உதவும் நிதிபோலே ஆபத்பந்துவாயிருக்குமவன்; பொன்னும் மணியும் போலே விரும்பத்தகுந்தவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றே னென்றாராயிற்று.

English Translation

The child who sucked the poisoned breast of the ogress, the God worshipped by clear thinking seers, the prince who appeared in the vestibule of Tirukkovolur, the Lord residing in the heans of Vedic seers, the radiance of their beings, my father, my protector, my wealth, my gem, - I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்