விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*  வாசவார் குழலாள் மலைமங்கை தன்- 
    பங்கனைப்*  பங்கில் வைத்து உகந்தான் தன்னை*  பான்மையை பனி மா மதியம் தவழ்* 
    மங்குலை சுடரை வடமாமலை-  உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்- 
    கங்குலை*  பகலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுடரை - ஸூர்யனக்கு அந்தர்யாமியா யிருப்பவனும்
வட மா மலை உச்சியை - வேங்கட மலையின் கிகரந் தானாயிருப்பவனும்
நச்சி நாம் வணங்கப்படும் - நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும்
கங்குலை - இராப்பொழுதுக்கு ப்ரவர்த்தகனும்
பகலை - பகற்பொழுதுக்கு ப்ரவர்த்தகனுமான பெருமானை

விளக்க உரை

திருக்கண்ணமங்கையெம்பெருமான் எப்படிப்பட்டவன்? ;- வேறு பகலற்ற அடியேன் போல்வார் திறத்திலே நிர்ஹேதுகமாக க்ருபைபண்ணவல்ல ஸ்வாமி; எங்களைப் போலன்றியே ஈச்வராபிமானம் கொண்டாடி யிருக்கிற ருத்ரனைத் தன் திருமேனியினொருபுறத்திலே வைத்து அதுதன்னைத் தன்பேறாக நினைத்து உகந்திருக்கும்படியான சீல குணத்தாற் சிறந்தவன்; இந்த சீல குணந்தான் ஏதோவொரு காலத்தளவி லன்றிக்கே எப்போதும் இதுவே இயல்வாயிருப்பவன்; குளிர்ந்த பூர்ண சந்திரனுடைய ஸஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசத்துக்கும் ஸூர்யனுக்கும் நியாமகன்; வடதிருவேங்கடமலையி னுச்சியை இருப்பிடமாகவுடையவன்; நம்மால் விரும்பி வணங்கப்படுமவன்; போகமனுவிப்பதற்குறுப்பான இராப் பொழுதென்ன, அதற்குப் பொருளீட்டுதற்குறுப்பான பகற் பொழுதென்ன இவ்விரண்டுக்கும் நிர்வாஹகன்; இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.

English Translation

The Lord benevolent to us, the Lord who bears fragrant coiffured Parvati's spouse on his person, the Lord of the sky bearing the radiant twin orbs the sun and the Moon, the Lord on the Northern Venkatam peak, the desirable night and day, - I sought and found him in Kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்