விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்*  மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை* 
    மைந்நிறக்கடலை கடல் வண்ணனை*  மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
    நென்னலை பகலை இற்றை நாளினை*  நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை* 
    கன்னலை கரும்பினிடைத் தேறலை*  கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொய்யினை - (அன்பில்லாதார்க்குப்) பொய்யனாயிருப்பவனும்
கையில் ஓர் சங்கு உடை - திருக்கையில் ஒப்பற்ற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
மை நிறம் கடலை - கறுத்த நிறத்தையுடை கடல்போன்றவனும்
கடல் வண்ணனை - கடல்போல் கம்பீர ஸ்வபாவமுள்ளவனும்
மாலை - எல்லாரினும் மேம்பட்டவனும்

விளக்க உரை

அடியேன் திருக்கண்ணமங்கையில் ஸேவிக்கப்பெற்ற எம்பெருமான் எப்படிப்பட்டவன்? – உண்மையாய் விலக்ஷணமான பக்தியோகத்தை ப்ரவர்த்திப்பித்தவன்; (அல்லது) அப்படிப்பட்ட பக்தியோத்திற்கு விஷயமாகக்கூடியவன்; பரமபதத்தைத் தரவல்ல ப்ரபத்தியோகத்தை ப்ரவர்த்திப்பித்தவன்; (அல்லது) அதற்கு இலக்காமவன்; கீழ்ச் சொன்ன பக்தியோகமும் ப்ரபத்தியோகமு மில்லாதவர்களுக்குத் தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களொன்றும் அறியவொண்ணா திருக்குமவன்; கீழ்ச்சொன்ன பக்தி ப்ரபத்திகளை யுடையார்க்குக் காட்சி கொடுக்கும் வடிவையுடையவன் : கடல் போல் காம்பீர்யமுள்ளவன்; ஸர்வஸ்மாத்பான்; சேராதவற்றையும் சேர்ப்பிக்கவல்லவன் என்னுமிடத்தை ஆலிலையிற் பள்ளிகொண்ட வரலாற்றினால் காட்டித்தந்தவன்; இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்களிலும் போக்யதை குன்றாதே யிருந்து, மாஸம் ஸம்வத்ஸரம் என்று சொல்லப்படுகிற காலப்பகுதிகளுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்; கன்னற்கட்டியும் கருப்பஞ்சாறும் போல இனிமைதானே வடிவெடுத்தவன் : இப்படிப்பட்ட பெருமானையாயிற்று அடியேன் திருக்கண்ணமங்கையிற் கண்டதென்கிறார்.

English Translation

The good penance, the heaven-giving truth, the false one, the conch bearer, the deep of the dark ocean, the hue of the ocean, the adorable one, the wonder-Lord on fig leaf, the yesterday, the today, the tomorrow, the coming month, the year, the sugar, the sweet sap of sugarcane, -I sought and found him in kannamangai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்