விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 
    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடவார் - ஸ்த்ரீகளினுடைய
செவ்வாய் - சிவந்த வாயில் நின்று முண்டான
மொழி - சொற்களை
பயிலும் - ஆவ்ருத்திபண்ணாநின்ற
சிறுபுலியூர், - சலசயனத்து-;

விளக்க உரை

மாதர்களின் கண்ணழகிலீடுபட்டு அழிந்துபோகாமே உன்திறத்திலீடுபட்டு உய்வு பெறவேண்டி, சிறுபுலியூர்ச் சலசயனத்தெம்பிரானே! உன்னைத் தொழுகின்றேன்; உபேக்ஷியாமல் அருள்புரிய வேணுமென்கிறார். கிளிமடவார் செவ்வாய்மொழிபயிலும் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; கிளிபோன்ற மடவாருடைய சிவந்த வாயில் நின்று முண்டான இன் சொற்களானவை பயிலும் – நிரம்பியிருக்கப்பெற்ற சிறுபுலியூர் என்றும்; கிளிகளானவை மடவாருடைய செவ்வாய்மொழிகளை அநுவாதம் செய்யப்பெற்ற சிறுபுலியூர் என்றும்.

English Translation

O Lord reclining on a five-hooded serpent bed in Sirupuliyur Salasayanam, where parrots learn sweet talk from the coral-lipped maidens! Pray grace that I may turn my heart from the dark-lotus-eyed dames to the lotus of your feet, and offer worship for elevation of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்