விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வினை - பாவங்கள்
பறையும் - தொலைந்துபோம்;
ஒருபால் - ஒருபக்கத்திலுள்ள
அறையும் புனல் - ஒலிக்கின்ற ஜல்த்திலும்
ஒருபால் - மற்றொருபக்கத்திலுள்ள
வயல் - கழனிகளிலும்

விளக்க உரை

க்ஷுத்ர விஷயங்களிலே தொண்டு பட்டுத் திரிகின்றவர்களை யழைத்து ‘நீங்கள் இப்படியிராமே வகுத்த விஷயத்தில் தொண்டுபடுங்கள்’ என்று முதலடியால் உபதேசித்து மற்ற மூன்றடிகளால் தமது உறுதியை அவர்கட்கு வெளியிடுகிறார். நான் இருக்கிறபடியைக் கண்டீர்களன்றோ, நீங்களும் இப்படியிருந்து வாழவேண்டாவோவென்கை. பணியுஞ்சிறு தொண்டீர் ‘என்பதைச் சிறுதொண்டர்க்கு விசேஷணமாக்கி யுரைத்தல் ஒன்று; (தகுதியற்றவர்களைப் பணிகின்ற நீசர்களே! என்றபடி.) அன்றியெ ‘பணியும்’ என்பதை ஏவற் பன்மை வினை முற்றாகக் கொண்டு எம்பெருமானைப் பணியுங்கள் என்னவுமாம். ‘பணிமின்’ என்றும் பாடமுரைப்பர்.

English Translation

O Devotees! Surrender to the Lord and exuit, your Karmas will instantly vanish. With the ocean lapping on one side, bee-humming groves and fields on the other side, the Lord resides in Sirupuliyur Salasayanam, I know of no god other than him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்