விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
    அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*
    கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
    ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பன்றி ஆய் - வராஹாவதாரமாகியும்
மீன் ஆகி - மத்ஸ்யாவதாரமாகியும்
அரி ஆய் - நரஸிம்ஹாவதாரமாகியும்
பாரை - நிலவுலகத்தை
படைத்து - ஸ்ருஷ்டித்தும்

விளக்க உரை

அவதாரங்கட்கு மூலமான பாற்கடலிற் பள்ளிகொள்ளும் வ்யூஹமூர்த்தியை ஒரு பாசுரத்திலும், அங்கு நின்று விலங்காகித் திருவவதரித்தமையை உ.ச.ரு.க0. (2, 4, 5, 10) ஆம் பாசுரங்களாகிய நான்கு பாடல்களிலும், கஜேந்திர ரக்ஷணத்தின் பொருட்டாகவும் வாமந ராம க்ருஷ்ண ரூபமாகவும் வந்து அவதரித்தமையை மற்றை ஐந்து பாடல்களிலுமாக இவ்வாறு தாம் பாடி அநுபவித்தமை தோற்ற ‘ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும்’ என்று பிரித்தருளிச் செய்தாரெனலாம்.

English Translation

This garland of sweet ten songs by spear-wielding Alinadon Kalikanri extols the Lord of Beautiful Alundur, -who came as a boar, a fish and a man-lion, who made, swallowed and remode the Universe, and who is worshipped by Indra, Brahma, siva and all other gods. Those who master it will become gods and rule the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்