விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
    நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*
    சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
    ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேடு ஏறு - இளமைமிக்குத் தோன்றுகின்ற
பொழில் - சோலைகளால்
தழுவும் - அணையப்பெற்ற
எழில் கொள் வீதி - அழகிய தெருக்களிலே நடக்கின்ற
திரு விழவில் - திருவிழாக்களிலே

விளக்க உரை

சேடு – அழகு, இளமை, பெருமை. திருவழாக்காலங்களில் வீதியில் நடக்கும் அத்திருவிழாவைக் காணும் பொருட்டு வீதியின் இருபுறங்களிலுமுள்ள மாளிகைகளின் திண்ணைகளின் ஆடலில்வல்ல மடவார் ஏறியிருக்கப்பெற்ற திருவழுந்தூரென்பன பின்னடிகளில். “ஆடு ஏறும் மலர்க்குழலார்” – ‘நறுமணம் மிக்க மலர்களைச்சூடிய கூந்தலையுடைய மடவார்’ என்று வியாக்கியானத்தி லுரைக்கப் பட்டுள்ளது.

English Translation

The Lord of gods resides in beautiful Alundur surrounded by fertile groves, and rows of gem-houses lining the streets in whose porticos flower-coiffured dames crows and watch the festival! processions, see, he is the Lord who destroyed Kamsa's wrestlers, his bow, his elephant, and a demon-cart. He is the Lord with boundless strength in hi arms, and bears a victorious discus.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்