விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
    அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*
    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
    அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் தமிழும் - செவ்விய தமிழ்ப்பாஷையும்
வடகடலையும் - ஸம்ஸ்க்ருத பாஷையும்
திகழ்ந்த - விளங்குகின்ற
நாவர் - நாக்கையுடையவர்களும்
திசை முகனை அனையவர்கள் - (தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான

விளக்க உரை

‘செந்தமிழும் வடகலையுந் திகழ்ந்த நாவர்’ எனறதனால் அத்திருப்பதியிலுள்ள அந்தணர் திராவிடவேதம் ஸம்ஸ்க்ருத வேதம் என்னும் இரண்டு வேதங்களிலும் வல்லவராவரென்பது தோன்றும். தமிழுக்கச் செம்மை – செவிக்கினிய செஞ்சொல்லா யிருத்தலோடு அர்த்தத்தை நேராகக் காட்டவல்லதாயிருத்தல். ஆதிகாலத்தில் ஸம்ஸ்க்ருதம் வடதிசையில் இமயமலைப் பிராந்தத்தில் கங்காதீரத்தில் காசி முதலிய இடங்களில் விசேஷமாய் வழங்கி வந்ததனால் வடமொழி யென்றும் வடகலையென்றும் வழங்கப்படுமென்ப.

English Translation

The Lord of goods resides with pleasure in beautiful Alundur, where Brahma-like Vedic seers of high merit, adept in reciting sweet Tamil and Sanskirt works perform fire sacrifices, whose smoke clouds the sky, See he is the Lord who for the sake of his ball-clasping slender-fingers-Sita rained his fire arrows and cut the strong heads and arms of the mighty king of Lanka city.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்