விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
    இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*
    புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
    அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூகம் தொக்க - பாக்கு மரங்கள் நிறைந்துள்ள
பொழில்கள் தோறும் - சோலைகளிலெங்கும்
சிறை புலம்பு வண்டு ஒலிப்ப - சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும்
குயில் கூவ - குயில்கள் கூவவும்
மயில்கள் ஆல - மயில்கள் கூத்தாடவும்

விளக்க உரை

சிலம்பு முதற்கலனணிந்தோர் செங்கட் குன்றம்” என்றது மஹா வராஹத்துக்கு அபூதோபமை (இல்பொருளுவமை) யாம். “செங்கற்குன்றம்” ன்ற பாடமே வியாக்கியானத்திற்கு இணங்கியது. சிவந்த ரத்னங்களையுடைய மேருமலை யென்று பொருள். கலன் – கலம் என்பதன் ஈற்றுப்போலி. ஆலுதல் – ஆரவாரித்தலுமாம்.

English Translation

Lord came as mountain-red bear, and young, with anklets and many other jewels shining on frame, lifting the Dame Earth from deluge waters, he kept her on his tusk, Lord, -behold ye! Bumble bees him over Areca fronds in groves where many cuckoos and peacocks dancesing, gushing with waters, the Ponni flows by Ani-alundur where resides the Lord of all gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்