விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
    வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*
    எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
    அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பயிலும் - நித்யவாஸஞ்செய்கிற
செல்வத்து - சிறப்பையுடைய
அணி - அழகிய
அழுந்தூர் - திருவழுந்தூரில்
நின்று - வந்துநின்று

விளக்க உரை

கேள்வியாவது – கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்; இது, கற்றவர்க்கு அக்கற்றதனாலாகிய அறிவை உறுதிப்படுத்தவும் கல்லாதவர்க்கு அவ்வறிவை உண்டாக்கவும் வல்லது. வேதம் முதவியன அவ்வூரிலுள்ள அந்தணர்களிடம் இயற்கையில் நிறைந்திருத்தலால் அவர் ஒவ்வொருவரும் பிரமனை யொத்திருப்பரென்கிறது. அன்றியே, தமது தவ வலிமையால் அவ்வூரிலுள்ள அந்தணர் ஒவ்வொருவரும் பிரமனைப் போல ஸ்ருஷ்டிக்க வல்லவரெனினுமாம். பயிலுதல் – எப்பொழுதும் நெருங்கி வஸித்தல். அணி – இந்நிலவுலகத்திற்கு ஆபரணம் போன்ற, அழுந்தூர் எனினுமாம்.

English Translation

Lotus-dame Lakshmi and Dame of Earth too, pressing the golden feet, while Munis sing songs, in the deep Ocean of Milk reclining on a bed of hood-serpent, Lord,-behold, ye! sound of the chanting of vedas and five sacrifices and Prasnas fill the sky-space, Brahma-like Vedic seers learn and teach in Ani-alundur where resides the Lord of all gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்