விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 
    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐவர் - பஞ்சேந்திரியங்கள்
கோ ஆய் - என்னை நியமிப்பனவாய்க்கொண்டு
என் மெய் - என் சரீரத்தில்
குடி ஏறி - குடிபுகுந்து
கூறை சோறு இவை தா என்று - துணியையும் சோற்றையும் கொடு என்று

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ஐவர் புகுந்து காவல்செய்தவக்காவலைப் பிழைத்துக் குடிபோந்துன்னடிகீழ் வந்து புகுந்தேன்” என்று இந்திரியங்களுக்கு ஒருவாறு தப்பிப்பிழைத்துத் திருவடிவாரத்திலே வந்து சேர்ந்ததாகச் சொன்னார்; அதுதான் இந்நிலத்திலேயாகையாலே இந்திரியங்களின் நலிவு தொடர்ந்தே வருவதாயிருக்கிறபடியைக் கண்டு மீண்டும் கதறுகிறார். அடியேன் உன்னொருவனையே ஸ்வாமியாகக் கொண்டவனே யன்றி ஐவரை ஸ்வாமியாகக் கொண்டவனல்லேன்; அப்படியிருந்தும் ஐவர் என்னை அடக்கியாள்பவராக நின்று என் உடலிலே குடிபுகுந்து தங்களுக்கு வேண்டிய இரைகளைப் பெற வேண்டிக் குமைத்து ஒரு நொடிப்பொழுதுங் கால்வாங்குகின்றிலர்; நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டுகின்றிலேன்; அழுந்தூர் மேற்றிசை நின்றவம்மானே! நீயோ விரோதிகளைப் போக்கி ஆச்ரிதரை ரக்ஷிப்பதைத் தன்பேறாக நினைக்கும்படியான பரிசுத்தியை யுடையையாயிருக்கின்றாய்; இந்த நிலைமைக்குக் கொடிகட்டி வாழ்கின்றாய்; அடியவர்களோடு நித்யஸம்ச்லேஷம் பண்ணியிருப்பதே உனக்குத் தொழில் என்பது விளங்க அடியவர்களோடு தலைவனான திருவனந்தாழ்வானை விட்டு பிரியாதிருக்கின்றாய்; அடியவர்கட்குப் புருஷகாரம் செய்யவல்ல பிராட்டியிடத்தில் மால்கொண்டிருக்கின்றாய்; நீ இப்படிப்பட்டவனான பின்பு என்னுடைய காரியம் நீ செய்யவேண்டு மத்தனையல்லது நான் செய்வ தொன்றறியேன்; நீ தானும் மிகையாகச் செய்யவேண்டுவ தொன்றுமில்லை; ஐயோவென்று திருவுள்ளத்திலே சிறிது இரங்கியருளினாற் போதுமானது என்கிறார்.

English Translation

O Pure One! O Bird-banner Lord! O Adorable Lord! O Lord reclining on a serpent that spits fire! O Lord of Sri! Five kings attacked me and established their tyrannical resign asking me to pay tributes of food and raiment all the time. I cannot bear their oppressive rules. I do not know what to do Alas, You do not show pity on me. O Lord of western Alundur, my Master, I have attained your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்