விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அழுது ஏங்கும் - விக்கி விக்கியழுத
தாடாளா - பெரியோனே!
தரை யோர்க்கும் - பூமியிலுள்ளவர்களுக்கும்
விண்ணோர்க்கும் - விண்ணுலகத்திலுள்ளவர்களுக்கும்
சேயாய் - கிட்டக்கூடாதவனே!

விளக்க உரை

உன்மேல் ஏதாகிலும் பழிசொல்லியே பொழுதைப் போக்க நினைத்திருப்பாருடைய வாய்க்கு நல்ல இரை கிடைக்கும்படி தோயாத தயிரையும் நெய்யையும் களவாடியுண்டு யசோதை கையிலே பிடியுண்டு தாம்பினால் கட்டுண்டு ‘நம்முடைய ஸௌலப்ய குணம் நன்கு வெளியாகப் பெற்றது’ என்று நெஞ்சினுள்ளே பெருமகிழ்ச்சி கிடக்கச் செய்தேயும் வருந்தினவன்போல அபிநயித்து விக்கிவிக்கியழுத பெருமானே!, இந்நிலத்திலுள்ளா ராகவுமாம், வி்ண்ணுலகத்திலுள்ளாராகவுமாம், யாராயினும் தம்முயற்சியாலே உன்னைப்பெற நினைப்பாராயின் அவர்கட்கு எட்டாதபடி தூரஸ்தனாயுள்ளவனே! க்ருத த்ரேதா த்வாபர கலியுகங்களென்கிற நான்கு யுகங்களையும் தானிட்ட வழக்காக நிர்வஹிக்குமவனே! திருவழுந்தூர்ப் பெருமானே! உன் திருவடிகளை யன்றி மற்றொன்றும் நானறியேனென்றாராயிற்று. ‘தோயா இன் தயிர்’ என்றும், ‘தோய் ஆவின் தயிர்’ என்றும் பிரிக்கலாம்; இரட்டுற மொழிதலாகக் கொண்டு, சிலவிடங்களில் தோயாத பசுவின் தயிரை யுண்பனென்றும், சில விடங்களில் தோய்ந்த பசுவின் தயிரை யுண்பனென்றுங் கொள்ளலாம். சொன்னார் வாய்வந்தபடி சொல்லித் திரிகின்றவர்கள் என்றவாறு. யசோதைப் பிராட்டியைப் பெற்றதாயென்றது – பெற்ற தாய்போலப் பரிவுடன் வளர்த்தமை பற்றி’ யென்க. ‘க்ருத’ என்னும் வடசொல் ‘கிரேத’ என விகாரப்பட்டது. ‘யுகமிவை நான்கும் முன்னானாய்’ என்று விளிப்பதன் கருத்தாவது – கலியுகத்திலும் கிருதயுக ரீதியை நடைபெறுத்த வல்ல சக்தி உனக்கு இருக்கச் செய்தேயும் என்னைக் கலிநலிவுக்கு ஆளாக்கித் துன்பப்படுத்துவதேன்? என்பதாம்.

English Translation

Easting the curds and butter in the shelf, O Cowherd-child, subject of ridicule! Your mother tethered you to a mortar, when even gods and kings cannot reach you! O kritta-Treta-Dvapara and Kali-you became the four Yugas in the yore! Other than you I know not a refuge Lord-in-residence in Western-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்