விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 
    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண் புக - வீரஸ்வர்க்கம் சென்று சேரும்படி
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்திலே
அரி ஆய் - நரசிங்கமாய்த் தோன்றி
பரியோன் - பருத்தவடிவையுடையனான அவ்விரணியனுடைய
மார்வகம் - மார்பை

விளக்க உரை

விண்டான் – தன்னை விட்டு நீங்கினவன் என்று பொருள் பட்டுப் பகைவனை உணர்த்தும் சொல் இது. அமர்க்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம் புகுவர்களென்பது நூற்கொள்கை யாதலால் ‘விண்புக’ எனப்பட்டது. கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை – மஹாபாரதத்தில் மேக்ஷதர்மத்தில் -?????????????? என்று சொல்லியிருக்கிறபடியே தலைகீழாக நடக்குங் கலியுகத் தன்மைகளைக் கண்டு கொண்டேன்; இப்படிப்பட்ட நிலைமையில் நமக்குச் செய்யத்தக்கதேது என்று ஆராய்ந்து பார்த்தவளவில் உன் திருவடிகளை ஆச்ரயிப்பதே கருமம் என்று துணிந்து கொண்டேன்; அத்துணிவுக்கீடாக உனது திருவடிகளை யன்றி வேறொன்றையு மறியாதவனா யிருக்கின்றே னென்றாராயிற்று. விண்டான், பரியோன் சொற்கள் இரணியனைக் குறிப்பன. கலியுகத்ததன் தன்மை கண்டேன் = பகவத் விஷயத்தில் வெறுப்பைப் பிறப்பித்து ஆத்மஹாநியை விளைப்பதே இக்கலியுகத்தின் தன்மையென்று தெரிந்து கொண்டேனென்க. கருமம் - வடசொல்; அண்டா = அண்டங்கட்கு அதிபதியே! என்றும், இடையனாகப் பிறந்தவனே! என்றும் பொருள்படும்.

English Translation

O Lord you came as a half-beast and half-man, tore into mighty chest of Hirayana! You raised a mountain to protect the cows, Merciful, Benevolent and Holy! I know the face of the kali age now i also know what is the fit thing for me. Other than your feet I know not where to go Lord-in-residence in Western-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்