விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏந்தும் - தரித்திருக்கின்ற
நீண்ட தோள் உடையாய் - பெரிய திருக்கைகளை யுடையவனே!
அடியேனை - உனக்கே உரியவனான என்திறத்தில்
உலகத்திடை - இவ்வுலகத்திலே
செய்யாத செய்தாய் - செய்யத்தகாதவற்றை யெல்லாம் செய்தாய்;

விளக்க உரை

இந்திரியங்களுடன் வைத்ததால் என்ன கெடுதி? நல்லகதைகளைக் கேட்கச் செவி வேண்டாவோ? நல்ல துதிகளை வாயாரச் சொல்ல வாய் வேண்டாவோ? ; “கண்டோங் கண்டோங் கண்டோங் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காண்பதற்குக் கண் வேண்டாவோ?, திவ்ய தேசங்களுக்கு நடந்து செல்லக் கரண களேபரங்கள் வேண்டாவோ? இவை யெல்லாம் நன்மைக்கு வேணுமென்று தானே உமக்கு இந்திரியங்களைத் தந்தது; என்றது அறியீரோ?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு மறுமொழியாகக் கூறுகின்றார் சிறுமைக்கும் பெருமைக்கும் முள்புகுந்தென்று தொடங்கி. இந்திரியங்களோ வென்னில், சிற்றின்பத்தைப் பெறுத்துதற்கும் பேரின்பத்தைப் பெறுத்துதற்கும் பொதுவாயிரா நின்றன; (சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகு் என்றதன் உட்கருத்து இது.) இப்படிப்பட்ட இந்திரியங்கள் நல்லெண்ணமின்றியே வஞ்சகத்தோடு என்னுட் புகுந்திருப்பதனால், அவை இழுத்துக்கொண்டு போகும் வழிகளிலெல்லாஞ் சென்று அவற்றுக்கு வேண்டிய இரைகளைத் தந்து ஆராதிப்பதற்கு அடியேன் அசக்த னாதலால் அவற்றால் நலிவுபடா நின்றேன்; அந்நலிவு தீர உன்னை வந்து சரணம் புகுந்தேனென்றாராயிற்று.

English Translation

Bearer of sharp discus and a white conch, Lord with four mountain-like long mighty arms! You gave me more than what you gave the world, making me experience small things and big things. Discreetly five senses entered my person, I dare not subserve them, I cam to you feet. O Lord I know not another refuge, Lord-in-residence in Western-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்