விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மால் வண்ணா - கருத்த நிறத்தை யுடையவனே!
மழை போல் ஒளி வண்ணா - மேகம் போன்று குளிர்ந்து அழகிய வடிவையுடையவனே!
சந்தோகா - சாந்தோக்ய உபநிஷத்தை உணர்ந்தவனே!
பௌழியா - கௌஷீதகீப்ராஹ்மண முணர்ந்தவனே
தைத்திரியா - தைத்திரீய உபநிஷத்தை உணர்ந்தவனே!

விளக்க உரை

உரை:1

அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும், அரவிந்தப் பாவயுந்தானு மகம்படி வந்து புகுந்து... பள்ளிகொள்கின்ற பிரானை” என்னுமா போலே பிராட்டியையும் உடனழைத்துக் கொண்டுவந்து அடியேனுடைய மனத்திலே மன்னி நிற்பவனே!, ஆர்த்தர்களை ரக்ஷிக்கைக்குப் பாங்கான ஸர்வஜ்ஞத்வத்தை யுடையவனே!, ஸர்வஸ்மாத்பரனே! அடியேன் உன்னுடைய திருவடிகளன்றி வேறொரு புகலிருப்பதாகக் கனவிலும் கருதுகின்றிலேன்; அடியேன் போல்வாரைக் காத்தருள்வதற்கென்றே திருவழுந்தூரில் நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கின்ற வுனக்கு, பஞ்சேந்திரியங்களின் கையிலே படுகொலைப் படாதபடி என்னைக் காத்தருள்கை மிகையன்றுகாண் என்றாராயிற்று. “பந்தார் மெல்விரல்” என்ற அடைமொழி மடந்தையர்க்கு இயற்கையாக இடுவதாம். சேலைகள் ஆபரணங்கள் முதலியவற்றை வருணித்துச் சொல்லுவதுபோல விளையாட்டுக் கருவிகளையிட்டு விசேஷிப்பதும் கவிமரபு.

உரை:2

மெல்லியவிரல்கள் பத்துடன், அழகிய வளையல்கள் அணிந்த தோள்களை உடையவளான பெரிய பிராட்டியுடன் எழுந்தருளியிருப்பவனே!. கருத்த நிறம் உடையவனே, மழைபோல் குளிர்ந்து ஒளிரும் வண்ணமுடையவனே!. சாந்தோக்கியம், பிருகதாரணியம், தைத்திரீயம், ஸாமவேதம் ஆகியவைகளில் வல்லவனே. திருவழுந்தூரில் மேல் திசையில் எழுந்தருளிய திருமாலே உன் திருவடிகளை அன்றி அடியேன் வேறு புகலிடம் அறியேன்.

English Translation

Ball-clasping fingers and well-bangled fore-arms lotus-dame Lakshmi residing beside you, you came and took my heart for residence adorable cloud-hued radiant Lord! Substance of Chandogya-Aranyaka-taittiriya-Sama Vedas, timeless! woe is me, I know not another refuge, Lord-in-residence in Western-Alundur!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்