விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*
    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறம் முதல்வனவனை - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,
அணி ஆலியர் கோன் - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்
மருவார் - பகைவருடைய
கறை - ரக்தக்கறையையுடைத்தான
நெடுவேல் - நீண்டவேற்படையை

விளக்க உரை

கறை நெடுவேல் – பகைவர்களைக் கொன்று ஏறின ரத்தக்கறையோடு கூடின வேற்படை. “தானுகந்த வூரெல்லாம் தன்தாள்பாடி” என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்கா யிருக்குமிவர்க்கு வேற்படையில் ரத்தக்கறை கழுவுவதற்கு அவகாசமில்லையாம்.

English Translation

This garland of songs by stained-spear-wielding Tiruvali King Kalikanri is on the first-cause Lord residing in Southern Alundur armid Subrahmanya like beautiful people. Those who master it will rule the whole sky-world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்