விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*
    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு வாழ் மார்வன் தன்னை - பிராட்டி வாழ்கிற திருமார்பை யுடையவனும்
திசை மண் நீர் எரி முதலா - திக்குகளென்ன பூமியென்ன ஜலமென்ன அக்னியென்ன ஆகிய இவை முதலான
உரு ஆய் நின்றவனை - பதார்த்தங்களாய் நிற்பவனும்
ஒலி சேரும் மாருதத்தை - சப்தத்தையும் குணமாகவுடைய வாயுவுக்கு நிர்வாஹகனும்
அரு ஆய் நின்றவனை - அரூபியாயிருப்பவனும்

விளக்க உரை

ஒலிசேரும் மாருதத்தை = என்ற உபநிஷத் க்ரமத்திலே வாயுவானது ஆகாசத்தில் நின்றும் பிறந்ததாதலால் பூர்வ பூர்வ பூதங்களின் குணமும் உத்தரோத்தர பூதங்களில் தொடர்ந்துவருங் கணக்கிலே வாயுவுக்குத் தன் குணமான ஸ்பர்சமும். தனக்குக் காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தமும் உண்டென்க. “பூநிலாய வைந்துமாய்” என்ற திருச்சந்த விருத்த முதற்பாசுரத்தில் “சிறந்தகாலிரண்டூமாய்” என்றதுங் காண்க. கருவார்கற்பகத்தை = ‘கரு’ என்று கர்ப்பத்தைச் சொல்லுகிறது; அடியுடைத்தான கல்பவ்ருக்ஷமென்கை. ஸ்வர்க்க லோகத்தில் ஆலம்பன மொன்றுமின்றியே நிற்கிற கற்பகத்தருபொ லல்லாமல் பூமியிலே வேர்ப்பற்றுடைத்தான கற்பகமாம் எம்பெருமான்.

English Translation

The Lord with Sri on his chest, who become the Quarters, the Earth, water Fire, wind and of else, the forms and their spirit, is my wishing-free Kalpaka. He resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்