விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 
    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சனை - கம்ஸனை
காய்ந்தானை - சீறித் தொலைத்தவனும்
கண்ண மங்கையுள் நின்றானை - திருக்கணணமங்கையில் நிற்பவனும்
வஞ்சனம் - வஞ்சனையையுடையளான
பேய் - பேய்ச்சியினுடைய

விளக்க உரை

ஆழ்வார் திருவழுந்தூ ரெம்பெருமான் திறத்தில் மிக்க ஈடுபாடு கொண்டிருப்பதைக் கண்ட திருகண்ணமங்கை யெம்பெருமான் ‘இவ்வாழ்வார் நம்மை மறந்தொழிவரோ என்னவோ’ என்று திடுக்கிட்டுச் சடக்கென ஓடிவந்து எதிரேநிற்க, கண்ணமங்கையுள் நின்றானை’ என்கிறார்.

English Translation

The Lord who killed Kamsa, the Lord who lives in Kannamangai, the Lord who sucked the poison breast of the beautiful ogress Putana and took her life, is a black-gem mountain residing with Vedic seers, in beautiful Alundur, I have seen him to day.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்