விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்றால் - கோவர்த்தந கிரியைக்கொண்டு
மாரி - பெருமழையை
தடுத்தவனை - தடை செய்தவனும்
குலம் வேழம் - சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்
பொன்றாமை - (முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்

விளக்க உரை

பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல். அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க. திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.

English Translation

The Lord who lifted a mount against a hailstorm, the Lord who saved the distressed elephant, the Lord who emerged victorious in war, the Lord who ate butter in stealth, resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்