விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூணித் தொழுவினிற் புக்குப்*  புழுதி அளைந்த பொன்-மேனி* 
    காணப் பெரிதும் உகப்பன்*  ஆகிலும் கண்டார் பழிப்பர்*
    நாண் இத்தனையும் இலாதாய்!*  நப்பின்னை காணிற் சிரிக்கும்* 
    மாணிக்கமே! என்மணியே!*  மஞ்சனம் ஆட நீ வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூணி - பசுக்கள் கட்டிய;
தொழுவினில் - கொட்டகையிலே;
புக்கு - நுழைந்து;
புழுதி அளைந்த - புழுதி மண்ணிலளைந்(து அதனால் மாசுபடிந்)த;
பொன்மேனி - (உனது) அழகிய உடம்பை;

விளக்க உரை

நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப் புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும் ‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும், நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பதுபோல நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். ...

English Translation

Seeing your dirty face covered with a golden-hued dust of the cowpen is always enjoyable to me. But others will speak ill. O Utterly shameless Gem, Nappinnai with laugh if she sees you. O Gem-hued Lor

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்