விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*
    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன்னொருகால்,
சிங்கம் அது ஆய் - நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு
அவுணன் - இரணியாசுரனுடைய
திறல் ஆகம் - வலிமிக்க மார்வை
கீண்டு -  இருபிளவாக்கி

விளக்க உரை

“நரசிங்கமாய்” என்னாமல் ‘சிங்கமதாய்’ என்றது என்னென்னில்; முகமே முக்கிய மாதலால், அதுதான் சிங்கவுருவமாதலால் சொல்லிற்று. செங்கமலத்தயனனையார் = அவ்வூரிலுள்ளவர்கள் நான்முகனை யொத்திருக்கின்றார்கள் என்றால் ‘எந்த விஷயத்தில்? என்று கேள்வி; ஓயாது வேதமோதும் விஷயத்தில் என்றாவது, ஸ்ருஷ்டியை நடத்தும் விஷயத்தில் என்றாவது கொள்க. என்று ஸ்தோத்ரரத்ந ஸ்ரீஸூக்திகாண்க.

English Translation

The Lord of discus and conch came as a man-lion and destroyed Hiranya's strong chest. Standing with beautiful lotus eyes, surrounded by Bramha-like Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்