விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*
    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு முது நீர் - ஒருநாளும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர் நிலைகளிலுள்ள தாமரைப்பூக்களிலே
அரவிந்தம் மலர் மேல் - தாமரைப்பூக்களிலே
வரி வண்டு - வரி வண்டுகள்
இசை பாட - இசைகளைப் பாடா நிற்க

விளக்க உரை

இப்பாசுரமும் நாயகி ஸமாதியாற் பேசுவதாம். என்னடைய செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் பஞ்செந்திரியங்களினுடையவும் வ்ருத்திகளைத் தன்வசமாக்கிக் கொண்டவரும், எனது மேனியழகைக் கொள்ளை கொண்டவரும், அரையில் பரியட்டம் தங்காதபடி பண்ணிவிட்டுப் போனவருமான தலைவர் வாழுமிடம் திருவழுந்தூர். ஐம்புலனையுங் கொள்கையாவது – லௌகிக பதார்த்தங்களில் ஒரு உறுப்புஞ்செல்ல வொண்ணாமல் “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீதரம் பாணித்வந்த்வ! ஸமர்ச்சயாச்புதகதா ச்ரோத்ரத்வய! த்வம் ச்ருணு-க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரே கச்சாங்க்ரியுக்மாலயம் ஜிக்ர க்ராண! முகுந்த பாத துலஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம்” (முகுந்தமாலை) என்றச்லோகத்தின் படியே ஸகல கரணவ்ருத்திகளையும் தன்வசப் படுத்திக்கொள்ளுதலாம். எழில் கொள்ளுகை – பிரிவுத்துயரத்தினால் மேனிநிறமழியச் செய்கை. போன புனிதர் ஊர்போலும் = இங்கே ‘புனிதர்’ என்றது எதிர்மறையிலக்கணை யென்னலாம்; இப்படி என்னைப் படுகொலை செய்பவர் எங்ஙனே பரிசுத்தராவர்? பெண்கொலைப் பாதகியன்றோ இவர் என்று ப்ரணயரோஷந்தோற்றச் சொல்லுகிறதாகலாம்.

English Translation

In the ever-wet lake of lotus flowrs, freckled bumble bees sing inebriated while swan-pairs dance together. The beautiful fields-surrounded Alundur is the residence of the pure Lord who came here yesterday, took my senses and my well being and left me so thin that my dress of stay on my person.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்