விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீடு மாடம் - உயர்ந்த மாடங்களில் (நாட்டப்பட்ட)
தனி சூலம் - ஒப்பற்ற சூலமானது
போழ்க - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே
கொண்டல் - மேகமானது
துளி தூவ - மழை பொழியப் பெற்றதும்

விளக்க உரை

என்னைப் பெறுதற்கு நெடுநாள் ஸமயம் பார்த்திருந்து பெறுகையால் அலப்ய லாபம் பெற்றவர்போல ஸந்தோஷித்து அந்த ஸந்தோஷம் விளங்குமாறு, தாமரைப்பூ மலர்ந்தாற்போல திருப்பவளத்தைத் திறந்து புன்முறுவல் செய்து அதிலே என்னை யீடுபடுத்தி ஹ்ருதயத்திலே வந்து புகுந்து ‘இனி இவர்க்கொரு போக்கில்லை’ என்று தோற்ற நின்றவர் கண்ணுக்கு இலக்காக வந்து நிற்கிற திவ்யதேசம் திருவழுந்தூர். அத்திருப்பதி எப்படிப்பட்டது? ; அங்குள்ள மாடமாளிகைகள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன. மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும். (“சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்டலகடிரிய” (3-9-4) என்றார் வைகுந்த விண்ணகர திருப்பதிகத்திலும்.) அந்த சூலங்கள் மேகங்களினுடைய கீழ்வயிற்றை யிடித்துப் பிளக்க, மழை சொரிகின்றதாம். (இவ்வதிசயோக்தியினால் மாடமாளிகைகளின் ஓக்கம் உணர்த்தப்பட்டதாம்.) இன்னமும், மாதர்கள் ஆடுகிறபோதுண்டான ஆரவாரம் இடையறாதே செல்கின்றதாம்.

English Translation

The tridents on tall mansions rip the clouds, spilling pearls over dancing girls whose ankle bells never cease ringing, in the beautiful streets of Alundur, It is the residence of the Lord who came close to me with a winsome smile on his lotus-petal-like lips, then entered my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்