விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*
    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துகிலின் கொடியும் - துணிகளோடு கூடின துவஜங்களும்
தேர் துகளும் - தேர் நடத்தும் போது உண்டாகும் தூள்களும்
துன்னி - நெருங்கி
மாதர் - ஸ்திரீகளுடைய
கூந்தல் - கூந்தலிலே (ஊட்டப்பட்ட)

விளக்க உரை

பகலுமிரவுந் தானேயாய் = என்ற உபநிஷத்தின்படியே பகற்போதுக்கு இறைவனான ஸூர்யணும் இராப்போதுக்கு இறைவனான சந்திரனும் தனது கட்டளைக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படியான நிர்வாஹ சக்தி வாய்ந்தவன் திருமால் என்றபடி. தன் ஸங்கல்பத்தாலே பகலை இராவக்கவும் இரவைப் பகலாக்கவும் வல்லவன் என்றுமாம்; பாரதப்போரில் ஜயத்ரதவத வ்ருத்தாந்தத்தை நினைப்பது. பாரும் விண்ணும் தானேயாய் = உபயவிபூதிக்கும் நிர்வாஹகனென்கை. நிகரில் சுடராய் இருளாகி நின்றார் = நக்ஷத்ரம் முதலிய சுடர்ப் பொருள்களையம் அவற்றுக்கு எதிர்த்தட்டான இருட்டையும் வடிவாகவுடையவன். ஸாத்விகர்களாய் ஜாயமாநகால கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரகாசமாக ஸேவைஸாதிப்பவன்; ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் தோன்றாதே இருள்மூடிக் கிடப்பவன் என்றவாறு. ஆகவிப்படி ஜகத்ரூபியா யிருந்தாலும் அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹவிசிஷ்டனாய் ஸேவை ஸாதிக்குமிடம் திருவழுந்தூர்.

English Translation

He with himself. He resides in alundur where the pennors on mansions tops, the dust risen from the chariot festival and the Agliwood smoke that the dames perfume their coiffure with, all liken the raincloud in a storm.bears the day and night within himself, he bears the Earth and sky within himself, he bears the light of the orbs and darkness

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்