விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*
    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொம்பில் ஆர்ந்த - கிளைகளினால் நிறைந்திருக்கிற
மாதவி மேல் - குருக்கத்தி மரத்தின் மேலே
கோதி - (தளிர்களைக்) கீறி
மேய்ந்த - மதுபானம் பண்ணின
வண்டு இனங்கள் - வண்டுத்திரள்கள்

விளக்க உரை

திருவழுந்தூரிலுள்ள மாதர்கள் தேனொழுகுங் கூந்தலையுடையார் என்கிறது பின்னடிகளில், மதுமிக்க பூக்கள் எப்போதும் கூந்தலில் அணிந்திருப்பவர்களென்கை. இதுவும் நகர்ச் சிறப்புகளுள் ஒன்றாம். கொம்புகள் செறிநிதிருந்துள்ள குருக்கத்தியின் மேலே செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி அவற்றில் நின்றும் மதுபானம் பண்ணின வண்டினங்கள், அவற்றிற் காட்டிலும் போக்யதையும் இருட்சியும் மிக்கதொரு இடந்தேடிப் போய் இராத் தங்கவேணும் என்று பார்த்து அங்குள்ள ஸ்த்ரீகளின் கூந்தற்கறையிலேறுகின்றனவாம். குருக்கத்தியி லிருப்பதிற் காட்டிலும் அங்குற்ற மாதர்களின் தலையிலிருப்பது போக்ய மென்னும் முகத்தால் அவர்களது சிறப்புச் சொல்லிற்றாயிற்று. ஐம்பால் = ஐவகைப் பான்மைகளை யுடையதென்று கூந்தலுக்குக் காரணப் பெயர். சுருண்டிருத்தல், அடர்ந்திருத்தல், கறுத்திருத்தல், நறுமணங் கொண்டிருத்தல் ஆகிய இவ்வைந்து தன்மைகள் உத்தம கேச லக்ஷணம் என்க.

English Translation

The golden-walled-city-of-Lanka's king Ravana's five-times-two heads were scattered by the hot Brahma-Astra arrows of our Lord the bow-wilder. He resides in Alundur where bumble bees burrow into golden Punnai flowers, then go to arrow-sharp-eyed dames to enjoy the five qualities of their coiffured hair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்