விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*
    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானம் - மேகமானது
முந்தி - (யாகஞ் செய்வதற்கு) முன்னமே
மழை பொழிய - மழை பெய்யப்பெற்றதும்,
மூவா உருவின் - கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான
மறையாளர் - பிராமணர்கள்

விளக்க உரை

இத்திருமொழியும் மேல்மூன்று திருமொழிகளுமாக நாற்பது பாசுரங்கள் திருவழுந்தூர்ப்பதி விஷயமாக அருளிச் செய்யப்படுமவை. தனது தவத்தின் வலிமையால் இரதத்துடன் வானத்திற் செல்லுந்தன்மையனான உபரிசரவஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்தவிவாதத்தில் பக்ஷபாதமாய்த் தீர்ப்புச் சொன்னது காரணமாக முனிவர்களாற் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுந்தப்பெற்ற இடமாதல்பற்றி இத்தலத்திற்கு அழுந்தூர் என்றுபெயர்வந்தது என்பர். ‘தேரழுந்தூர்’ எனவும் வழங்கப்பெறும். இத்தலத்திலெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருநாமம் ‘ஆமருவியப்பன்’ என்பதாதலால் “தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்வந்த வெந்தை பெருமானார் மருவிநின்றவூர்” என்று தொடங்குகின்றார்.

English Translation

The Lord in the yore took birth in the dead of the night, releasing his father from shackles. He resides in Alundar laid out with beautiful streets where youthful Vedic seers perform fire sacrifices thrice a day ensuring rain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்