விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளை வயலுள் - பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற)
கரு நீலம் - கருநெய்தலை,
களைஞர் - களைபிடுங்குகிற உழவர்
தாளால் - (தங்கள்) கால்களாலே
தள்ள - ஒதுக்கித்தள்ள,

விளக்க உரை

பாகவதர்களை ஸேவிக்கப் பெற்றதனால் தமக்குண்டான எல்லை கடந்த ஆனந்தத்தைப் பேசி, அயோக்யனான எனக்க இப்படிப்பட்ட ஆனந்தத்தை யநுபவிக்கும்படியான பாக்கியம் எங்ஙனே வாய்த்ததோ, தெரியவில்லையே! என்று தம்மில் தாம் விஸமயப்படுகிறார். நெற்பயிர்கள்விளையங் கழனிகளிலே இடையிடையே கருநெய்தல்கள் முளைத்திருக்கும்; களைபிடுங்கித்திரியும் உழவர்கள் அவற்றைப் பிடுங்கியெறிய, அவற்றின்றும் ஒழுகாநின்றதேனின் மணம் ஊரெங்கும் வீசுகின்றதாம்; இப்படிப்பட்ட போக்யதைபொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற ஸாரநாதப் பெருமாளுடைய திருவடிகளில் அன்புடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே என் உள்ளம் நீர்ப்பண்டமாக உருகுகின்றதே! ; இப்படிப்பட்ட ஹ்ருதயபரிபாகத்திற்கு நான் உரியேனோ? நானோ ஆத்மாபஹாரக்கள்வன்; *வஞ்சக்கள்வன் மாமாயனான எம்பெருமானையும் வஞ்சிப்பவனாயிருக்கின்றேன்; இப்படியிருக்கையாலே மேன்மேலும் துக்கங்களையே அநுபவிக்கவுரியேன் நான்; அப்படியிருந்தும் ஒரு துக்கத்துக்கும் ஆட்படாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை ஸேவிப்பதும் அதனால் நெஞ்சு உருப்பெறுவதுமாய்ச் சதிர்த்தேனே!, இஃது என் கொல்! என்கிறார்.

English Translation

I am false, wicked, constantly living in a flood of misery. Yet I have received his grace, what a miracle! See my heart melts for devotees of the Lord of Tiruccherai, where tillers of the land weed out blue waterlily from their fields with their feet, and the nectar from the flowers spills over their feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்