விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*
    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு அன்று - முன்பொருகால்
ஏனம் ஆய் - மஹாவராஹரூபியாய்
உலகை - பூமியை
இடந்தா - கோட்டாற் குத்தியேடுத்துவந்த
பண்பாளா - குணசாலியே!

விளக்க உரை

முன்பு வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹாவராஹ மூர்த்தியாய், அண்டபித்தியிலே சேர்ந்திருந்த பூமியை அதில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்துக் கொணர்ந்த நீர்மையை யுடையவனே! என்று இடையறாதே சொல்லிக்கொண்டு அந்நீர்மையிலே தோற்று உனது திருவடிகளே எனக்குத் தஞ்சம்; வேறொரு புகலை உடையேனல்லேன்; இங்ஙனே ஆணையிட்டுச் சொல்லக்கடவேன். இப்படி திண்ணிதாக அடியேன் விண்ணப்பஞ்செய்வது எது கொண்டென்னில்; வண்டுகள் மாறாத பசுமலரையுடைத்தான சோலைகளாற் சூழப்படட் திருச்சேறையிலெழுந்தருளியுள்ள பெருமாளுடைய அடியார்களை ஸேவித்த மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சும் கண்களும் களித்கிறபடியைக் காணுங்கோள்; இவ்வளவு பரிபாசம் பெற்றேனான பின்பு அந்த அத்யவஸாயம் திடமாயிருக்கத்தட்டுண்டோ வென்கிறார்.

English Translation

O Lord who came in the yore as a bear and lifted the Earth! Other than the refuge of your lotus feet, I have no refuge, I declare. Having seen your devotees in Ticcherai amid bee-huming groves, see the way, my heart and my eyes rejoice!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்