விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்
    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேர் ஆளும் - தேர்களை நடத்தவல்லவனாய்
வாள் - வாட்படையையுடையனான
அரக்கன் - இராவணனுடைய
தென் இலங்கை - அழகிய லங்காபுரியை
வெம் சமத்து - கொடிய போர்க்களத்தில்

விளக்க உரை

எம்பெருமானைப் பிரிந்து நெடுநாள் தரித்திருப்பினு மிருப்பேன்; பாகவதர்களைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்ககில்லே னென்கிறார். தேர்வீரனான இராவணனுடைய படைவீடான இலங்காபுரியைப் பொடிபடுத்தின பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை யெம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப்பாடும் பெருமையுடையார் எவரோ, அவரை ஒருகாலும் பிரியமாட்டே னென்றாராயிற்று. கீதையில் “ஸ மஹாத்மா” என்றும் “மஹாத்மாந” என்றும் அவன்றானே சொல்லிப் போந்தவர்களையாயிற்று இவர் ‘பெரியோர்’ என்கிறது.

English Translation

The Lord rained hot arrows on the mighty chariot-riding Rakshasa king Ravana and destroyed his grand island city of Lanka with him. He is the Lord of eternals, wearer of the ground Tulasi garland over a mountain-like-chest, residing in Tiruccherai. I shall never part from those great ones who chant his names.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்