விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 
    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் புருவம் - அழகிய புருவத்தையும்
அரி நெடு கண் - செவ்வரி கருவரிபடர்ந்து நீண்ட கண்களையுமுடையளான
அலர் மகளை - பெரிய பிராட்டியாரை
வரை அகலத்து - மாலைபோன்ற திருமார்பிலே
அமர்ந்து - பொருந்தவைத்துள்ளவனும்

விளக்க உரை

அழகிய திருப்புருவங்களோடும் நீண்ட திருக்கண்களோடுங் கூடின பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே வைத்துக் கொண்டிருப்பவனும், முள்ளைக்கொண்டே முள்ளைக் களைவதுபோல, கன்றினுருவங் கொண்டுவந்த ஒரு அஸுரனைக் கொண்டு விளாமரமாய் நின்ற மற்றோரஸுரன்மேல் வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும், அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருச்சேறையில் ஆகாசத்தளவும் ஓங்கியுள்ள ஸந்நிதியில் நித்யவாஸஞ்செய்தருள்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிப்பவர்கள் ஒருநொடிப் பொழுதும் எனது நெஞ்சைவிட்டுப் பிரியாதிருக்கின்றனர் என்றாராயிற்று.

English Translation

The Lord who threw the demon-calf against the wood-apple tree and destroyed both, the Lord who bears the beautiful-eyed lotus-dame Lakshmi on this chest, resides amid fragrant groves in his sky-touching temple in Tan-cherai. Those who worship him are permanent residents of my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்