விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*
    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண் சோர - கண்கள் சுழலமிட்டுத் தளரும்படியாகவும்
வெம் குருதி - வெவ்விய ரத்தமானது
வந்து இழிய - வெள்ளமிட்டுப் பெருகவுமாய்
மண் சேர - மாண்டுபோம்படி
வெம் தழல் போல் கூந்தலாளை - நெருப்புப்போல் செம்பட்ட மயிரையுடையளான பூதனையினுடைய

விளக்க உரை

சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாட மாளிகைகள் நிறைந்த திருச் சேறையி லெழுந்தருளி யிருக்கும் எம்பெருமானை நோக்கி ‘பூதனையை முடித்த சிறுகுழந்தாய்!’ என்றும் ‘நித்யஸூரிகட்குத் தலைவனே!’ என்றும் சொல்லி அவனுடைய பரத்வஸௌலப்யங்களைப் போற்றி உருகுகின்ற பாகவதர்கள் எவரோ, அவர்கள் என்தலைமேல் வீற்றிருக்கவுரியார் என்கிறார். மாமதலாய்! = பிள்ளைத்தனத்தில் குறையற்றவனே! என்றபடி. ‘மதலை’ என்பதன் விளி ‘மதலாய்’ என்றாம். இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ப்ரவேசத்தில் – “பிள்ளை யழகிய மணவாளரரையர் கரையே போகாநிற்க, ‘உள்ளே மாமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?’ என்ன; ‘ஆர்தான் திருமங்கையாழ்வாருடைய பசைந்த 1. வளையத்திலே கால்வைக்கவல்லார்?’ என்றருளிச் செய்தார்” என்றுள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கவை. இவ்வாக்கியத்தின் கருத்து யாதெனில்; பிள்ளையழகிய மணவாளரரையர் என்பவர் காரியவிசேஷமாய்த் திருச்சேறைவழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுமட் புகாமல் வயல்வழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுட் புகாமல் வயல்வழியே போய்க்கொண்டிருந்தார்; அங்கு அவரைக்கண்ட வொருவர் ‘வயல்வழியே போவானேன்? திருப்பதியினுள்ளே புகுந்து ஸாரநாதப்பெருமாளை ஸேவித்துப் போகாலாகாதோ?’ என்று கேட்க; அதற்கு அரையர் சமத்காரமாக ஒரு உத்தரமுரைத்தார்; (யாதெனில்;) இத்திருப்பதி விஷயமாகப் பாசுரமுரைத்த திருமங்கையாழ்வார் “தண்சேறையெம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே” என்றார்; அப்பாசுரத்தின்படி, திருச்சோறை யெம்பெருமானை ஸேவிப்பவர்கள் ஆழ்வாருடைய திருமுடியின்மே லேறவேண்டியதாகுமே; அது நமக்குப் பெருத்த அபசாரமாகுமே; அதற்கு அஞ்சியே உள்ளுப்புகாமல் கரையோரமே போய்விடுகிறேன் என்றாராம். இது ரஸோக்தியேயன்றி வேறில்லை, திருச்சேறை யெம்பெருமான ஸேவிப்பவர்கள் பக்கலில் ஆழ்வார் வஹித்திருக்கும் ப்ரதிபத்தியை விளங்கக்காட்டினபடி.

English Translation

The Lord who sucked the hot-eyed ogress Putana's breast and took her life, the Lord of celestials, resides amid wealthy jewel-mansions that touch and play with the tender moon in Tan-cherai. Those who worship him are my masters, see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்