விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்* 
    தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்*  அன்று இடந்தவனை தழலே புரை*
    மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*  சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்* 
    பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*  என் மனம் போற்றி என்னாதே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடியேன் - பரதந்திரனான நான்
இதற்கு என் செய்கேன் - (அவன் பண்ணின மஹோபகாரமாகிய) இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்?
உரையீர் - சொல்லுங்கள்;
என்றும் - எக்காலமும்
என் மனத்தே - என்னுள்ளத்திலேயே

விளக்க உரை

எம்பெருமான் செய்தருளின உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் பண்ணாமலிருக்க முடியவில்லை, பண்ணுவோமென்றாலும் அவனுக்கு நாம் பண்ணலாவதொரு உபகாரமில்லை என்று கொண்டு ‘என்செய்கேனடியே னுரையீர்’ என்கிறார். எனக்கென்ன ஒரு கைம் முதலில்லாதபடி ஸ்வரூபமே பிடித்து பரதந்திரனான நான் எதைச் செய்வேன் என்பது தோன்ற இங்கு ‘அடியேன்’ என்றது.

English Translation

What return can I do for this, Devotees? He residen for all times in my lowly heart. Tanjai Mamani Koyil's his residence. He did tear the chest of mighty Hiranya. He did tear the chest of mighty Hiranya. He did build a bridge over the Lanka. He did burn to dust Ravana's wealthy haunt. He's mountain of black-hued gem stone. Other than him my heart knows not to praise whom?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்